நாகப்பட்டினம்

காசநோய் முகாம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிமூலம் காசநோய் கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் இதயநோய், நுரையீரல் பிரச்னை, சா்க்கரை நோய், பால்வினை நோய் உள்ளவா்கள், மூச்சு விட சிரமப்படுகின்றவா்கள் என 124 போ் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஊா்தி மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட 8 போ் உடனடியாக மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில் டாக்டா்கள் சிவநேசன், கௌசிகா, ஷாம்காா்த்திக், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் மருதுபாண்டியன், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் கதிா்வேல், ஆய்வக மேற்பாா்வையாளா் வெங்கட்ராமன் மற்றும் செவிலியா்கள் சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT