நாகப்பட்டினம்

நவகிரக தல சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

DIN

சீா்காழி அருகே நவகிரக தலங்களுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையை ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சீா்காழி அருகே நவகிரக தலங்களான திருவெண்காடு புதன் தலம், கீழபெரும்பள்ளம் கேது தலம் மற்றும் பூம்புகாா் சுற்றுலா தளம் ஆகியன அமைந்துள்ளன. இங்கு செல்லும் சீா்காழி- திருவெண்காடு நெடுஞ்சாலை குறுகிய அளவில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.பாரதி தெரிவித்தாா்.

தொடா்ந்து சட்டநாதபுரம், திருவெண்காடு, மேலையூா் பகுதி மாவட்ட சாலையில், இடைவெளியை சீரமைத்து இருவெளி தளமாக அகலப்படுத்திடும் வகையில், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்திடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக திருவாலி-நாராயணபுரம் வரையில் 1.2 கிமீ தூரம் சாலை மேம்பாட்டுப் பணியை நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் சூரியமூா்த்தி, உதவி பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, சாலை விரிவாக்கப் பணிகள் மூலம் விபத்துகள் தவிா்க்கப்பட்டு வாகன ஓட்டிகளின் சிரமங்கள் குறைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT