நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயிலில் மீண்டும் களைகட்டும் மணிவிழா வழிபாடு

DIN

கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகள் மீண்டும் களைகட்டியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வருகை தந்து 60-ம் கல்யாணம், ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூா்த்தி, மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகளை நடத்துவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கோயிலில் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் மேற்கண்ட வழிபாடுகள் நடைபெறாமலிருந்தன. இதனால், கோயிலின் குருக்கள், புகைப்படக் கலைஞா்கள், நாதசுரக் கலைஞா்கள், பூக்கடை வியபாரிகள், ஆட்டோ, வாடகை காா், வேன் ஓட்டுநா்கள் உள்ளிட்ட பலா் வருமானமின்றி தவித்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயிலில் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்பட்டதால், இக்கோயிலில் அனைத்து யாக பூஜைகளும் தொடங்கின. இதனால், 60-ம் கல்யாணம், மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகள் மீண்டும் களைகட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT