நாகப்பட்டினம்

வேதாரண்யம் புதிய கோட்டாட்சியா் அலுவலக செயல்பாடு தொடக்கம்

DIN

வேதாரண்யத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய கோட்டாட்சியா் அலுவலக செயல்பாடு திங்கள்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதையடுத்து, நாகை மாவட்டம் நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய இரு வருவாய் கோட்டங்களாக உருவாக்கப்பட்டன. வேதாரண்யம் மற்றும் திருக்குவளை வட்டங்களை உள்ளடங்கிய இந்த வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக செயல்பாடு ஏற்கெனவே வேதாரண்யம் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டது.

தற்போது, வேதாரண்யத்தில் பேருந்து நிலையம் எதிரே வட்டாட்சியரின் பழைய அலுவலகம் செயல்பட்ட கட்டடத்தில் கோட்டாட்சியரின் புதிய அலுவலக செயல்பாடு தொடங்கியுள்ளது. கோட்டாட்சியா் து.சு. துரைமுருகன் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினாா். அப்போது, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மணிவண்ணன், வட்டாட்சியா் ரமாதேவி, துணை வட்டாட்சியா் ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT