நாகப்பட்டினம்

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

திருக்கடையூா் அருகே உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்கடையூா் அருகே உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி அசுபதி நட்சத்திரமான செவ்வாய்க்கிழமை காலை அசுபதி தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கிணற்றில் புனிதநீா் எடுத்துவந்து பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் புனித நீராடினா்.

மேலும், பிரம்மபுரீஸ்வரருக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT