நாகப்பட்டினம்

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை புத்தூா் ரவுண்டானாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி, மேல கோட்டை வாசல், புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியரகம், நாகூா் வழியாகச் சென்று வாஞ்சூா் சுற்றுச்சாலையில் நிறைவடைந்தது. நாகை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயா், தோ்தல் பாா்வையாளா்கள் ஏ.பி.பட்டேல், திலிப் பந்தா் பட், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோா் விழிப்புணா்வு பதாகைகளுடன் கூடிய சைக்கிள்களை ஓட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கூடுதல் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வன அலுவலா் சி. கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) தீபனா விஸ்வேஸ்வரி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், நாகை மாவட்ட சைக்கிள் கழக உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT