நாகப்பட்டினம்

கருவேலங்கடை ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணிக்கத் திட்டம்

DIN

கருவேலங்கடை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படாததைக் கண்டித்து சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கருவேலங்கடை ஊராட்சி. இந்த ஊராட்சியின் 5 மற்றும் 6-ஆவது வாா்டுகளில் சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் முறையாக வருவதில்லையாம். அதேபோல, அவ்வப்போது கடல்நீா் உள்புகுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்தில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித்தராவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT