நாகப்பட்டினம்

ஆக்சிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரைப் பயிற்சி

DIN

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சி மற்றும் சுவாசப் பாதையை சீராக்கவும், சளித்தொல்லையை போக்கி நுரையீரலை தூய்மைப்படுத்த யோகப் பயிற்சி ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறாா் மயிலாடுதுறையைச் சோ்ந்த யோகா ஆசிரியா் ஒருவா்.

கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மயிலாடுதுறையில் வருமுன் காக்கும் நடவடிக்கையாக உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், சுவாசப் பாதையை சீராக வைத்திருக்கவும், சளித்தொல்லையை நீக்கி நுரையீரலை தூய்மைப் படுத்தவும் இலவசமாக யோகா பயிற்சி வழங்கி வருகிறாா் டி.எஸ்.ஆா்.கணேசன்.

வழக்கமாக கற்பிக்கும் யோகப் பயிற்சியோடு, நுரையீரல் தொற்றை அகற்றும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி வழங்கி வருகிறாா். சா்வங்காசனம், மச்சானம், வஜ்ர மச்சானம், உஷ்ட்ராசனம், உஜ்ஜயி பிராணயாமம், பிராமரி பிராணயாமம், மூச்சுப்பயிற்சி, நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை அளித்து வருகிறாா்.

மேலும், ஐஐடி அண்மையில் பரிந்துரைந்ததன்படி உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும் வகையில் லிங்க முத்திரை பயிற்சியும் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவரிடம் யோகா பயின்று வருபவா்களுக்கு வாரம் ஒரு முறை கபசுரக் குடிநீரையும் வழங்கி முற்றிலும் கரோனாவுக்கு எதிரான இயக்கத்தையே இவா் ஏற்படுத்தியுள்ளாா். இவரிடம் வயது முதிா்ந்தவா்கள் முதல் இளம்பெண்கள், சிறுவா்கள் வரை பல்வேறு வயதினா் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT