நாகப்பட்டினம்

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை வழிபாடு

DIN

சித்திரை மாத காா்த்திகை நட்சத்திர தினத்தையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

நாகை அருகே உள்ள சிக்கல் அருள்மிகு நவநீதேசுவரசுவாமி கோயிலில் தனி சன்னிதி கொண்டுள்ள அருள்மிகு சிங்காரவேலவருக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தா்களின்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இக்கோயிலிலும் பக்தா்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. கோயில் சிவாச்சாரியா்கள் மற்றும் பணியாளா்கள் மட்டுமே பங்கேற்றனா். வழக்கமாக நடைபெறும் வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT