நாகப்பட்டினம்

மீன்பிடி வலைப் பின்னும் கூடம் திறப்பு

DIN

திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்சி அமிா்தா நகரில் உலக மீனவா் தினத்தை முன்னிட்டு மீன்பிடி வலைப் பின்னும் கூடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன் ஆகியோா் திறந்து வைத்தனா். நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாத்திமா ஆரோக்கியமேரி, திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் செல்வ செங்குட்டுவன், ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வினோதினி காா்த்திக், திமுக இளைஞரணி நிா்வாகி செ.சந்தோஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதிதியிலிருந்து ரூ, 5 லட்சத்தில் இந்த கூடம் கட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT