நாகப்பட்டினம்

ஆட்சி மொழி செயலாக்கம்: நாகை இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு கேடயம்

DIN

தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தோ்வு பெற்ற நாகை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கேடயம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளா்களுக்குப் பரிசுத் தொகையும், ஆட்சி மொழித் திட்ட செயலாக்கத்தில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய அரசுத் துறை அலுவலகத்துக்கு கேடயமும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பரிசுத் தொகை, கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, கடந்த 2019-ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுத் துறை அலுவலா்கள் 9 பேருக்குப் பரிசுத் தொகையும், ஆட்சி மொழி செயலாக்கத்தில் சிறந்த அரசுத் துறை அலுவலகத்துக்கான கேடயத்தை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா. அன்பரசி முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவியாளா் ஆ. லியாகத் அலி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT