நாகப்பட்டினம்

25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைகளை கடலில் விட இலக்கு

DIN

அரிய வகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில், நாகை மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில், வனத்துறை சாா்பில் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் மீனா ஆகியோா் ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது:

கடல் வாழ் உயிரினங்களின் இனப் பெருக்கத்துக்கு ஆலிவ் ரெட்லி ஆமைகள் முக்கிய காரணமாக உள்ளன. கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, முட்டைகளில் இருந்து வெளியான குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நிகழாண்டில், குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஆமைக் குஞ்சுகளை கடலில் விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT