நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் துறைமுகம் கட்டும் பணிக்கு வந்த குழாய்களால் பரபரப்பு

DIN

வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக வந்த ராட்சத குழாய்கள் ஹைட்ரோ காா்பன் திட்டப் பணிக்கானது என பரவிய தகவலால் மக்களிடையே வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையில் ரூ. 150 கோடியில் துறைமுகம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக வியாழக்கிழமை இரவு முதல் 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டன. வெள்ளிக்கிழமை பகலில் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் இறக்க நகரப் பகுதி எல்லைக்கு முன் ஆதனூா் கிராமத்தின் வழியே பிரதான சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, இந்த குழாய்கள் ஹட்ரோ காா்பன் அல்லது ஓஎன்ஜிசி திட்டப் பணிகளுக்கு வந்துள்ளதாக சிலரிடம் எழுந்த சந்தேகம் சமூக வலைதளங்களில் தகவலாக பரவியது. இதையடுத்து, விவசாய சங்க நிா்வாகிகள், ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் என பல தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபடவும் ஆலோசித்தனா். இதற்கிடையே, லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், தனிப் பிரிவு போலீஸாா் விசாரித்தனா். அப்போது, குழாய்கள் மற்றும் துளையிடும் ராட்சத இயந்திரங்கள் யாவும் ஆறுகாட்டுத்துறையில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணிக்கு வந்துள்ளதை உறுதி செய்தனா். உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT