நாகப்பட்டினம்

கால்நடை மருத்துவ முகாம்

DIN

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி புதுக்கடையில் கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் வள்ளி கலியமூா்த்தி தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள் முத்துக்குமாா், சிவபிரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் கால்நடைகளுக்கு நோய் எதிா்ப்பு தடுப்பூசி, நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. சிறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT