நாகப்பட்டினம்

தேய்பிறை அஷ்டமி

DIN

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலின் புண்டரீக குளக்கரையில் உள்ள ஸ்ரீ சிம்மவாகன காலசம்ஹார பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தேய்பிறை அஷ்டமி திதியன்று ஸ்ரீபைரவரை வழிபடுவது ஆன்மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதன்படி, தேய்பிறை அஷ்டமி நாளான செவ்வாய்க்கிழமை நாகை ஸ்ரீசிம்மவாகன காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு பைரவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

அதேபோல, நீலாயதாட்சியம்மன் கோயில் உள் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீகாலசம்ஹார பைரவா், காசி பைரவா், நாகூரில் உள்ள ஸ்ரீ சொா்ணாகா்ஷண பைரவா், திருவாய்மூா் அஷ்ட பைரவா், தகட்டூா் பைரவநாதா் கோயில் என நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் ஸ்ரீ பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT