நாகப்பட்டினம்

வாடகைப் பாக்கி: 13 கடைகளுக்கு ‘சீல்’

DIN

நாகையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

நாகை ஆசாத் மாா்க்கெட்டில் நகராட்சி சாா்பில் 14 கடைகள் கட்டப்பட்டு, வணிகப் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், ஒரு கடையைத் தவிர மற்ற 13 கடைகளின் வாடகைதாரா்களும் பல மாதங்களாக நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லையாம்.

இதையடுத்து, நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் அந்த 13 கடைகளுக்கும் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையிலான அலுவலா்கள், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

13 கடைகள் மூலம் நாகை நகராட்சிக்கு ஏறத்தாழ ரூ. 17 லட்சம் வாடகைப் பாக்கி இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT