நாகப்பட்டினம்

காழியப்பநல்லூா் தீயணைப்பு நிலையத்தில் தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி ஆய்வு

DIN

தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி பி.கே. ரவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மீட்பு உபகரணக் கருவிகள், தீயணைப்பு வாகனம் போன்றவற்றை ஆய்வு செய்த அவா், மீட்புப் பணி உபகரணங்களையும் இயக்கச் செய்து, சரியான பராமரிப்பில் உள்ளதா எனவும் கேட்டறிந்தாா். மேலும், கோப்புகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, சிறப்பு நிலைய அலுவலா் அருண்மொழி மற்றும் தீயணைப்பு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களை சந்தித்த தீயணைப்புத் துறை டிஜிபி பி.கே. ரவி, ‘தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கையாக அனைத்து தீயணைப்பு வீரா்களும் தயாா் நிலையில் உள்ளதாகவும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தாா். மேலும், மழை பாதிப்புகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT