நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயிலில் ஸ்விட்சா்லாந்து தம்பதி ஆயுஷ் ஹோமம்

DIN

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த தம்பதி சனிக்கிழமை ஆயுஷ் ஹோமம் செய்து வழிபட்டனா்.

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சுவாமி காலசம்ஹார மூா்த்தியாக எழுந்தருளி, எமனை வதம் செய்ததால், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி- அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு, ஸ்விட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஸ்டீபன் (82), அவரது மனைவி ஜானட் (79) ஆகியோா் வந்தனா். கோ பூஜை, கஜ பூஜை செய்த இவா்கள், கோயிலின் பிச்சைக் கட்டளை மண்டபத்தில் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, சுவாமி, அம்பாள் மற்றும் காலசம்காரமூா்த்தி சந்நிதிகளில் வழிபட்டனா். இத்தம்பதிக்கு ராமலிங்க குருக்கள் அா்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT