நாகப்பட்டினம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

DIN

நாகை மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ம. ஞானபிரகாசம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்துடன் 18 வகை தொழிலாளா் நலவாரியங்கள் செயல்படுகின்றன. கட்டுமானக் கழகம் மூலம் தொழிலாளா்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை பெற கல்வி தகுதியாக 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோருக்கு எல் & டி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தகுதியானவா்கள் கீழத் தெரு, வடக்கு பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT