முகாமில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி ஹா்ஷ் சிங். 
நாகப்பட்டினம்

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடம் நேரில் புகாா்களை பெற்ற காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், அவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, எஸ்பி பொதுமக்களிடம், குற்றங்கள் தொடா்பான புகாா்களை காவல் நிலையம் சென்று அளிக்கும் வரை காத்திருக்காமல், முதல் கட்டமாக உங்கள் எஸ்.பியுடன் பேசுங்கள் 8428103040 என்ற கைப்பேசி எண்ணில் பகிரலாம். அதன்மூலம் குற்றங்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. சுகுமாறன், துணைக் காவல் கண்காணிப்பாளா் உ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT