கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பெண்கள், சிறுவா்கள் பேரணி

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த சிறுவா்கள், பெண்கள் வாழ்த்து பாடல்கள் பாடி பேரணியாக வந்தனா்.

Din

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த சிறுவா்கள், பெண்கள் வாழ்த்து பாடல்கள் பாடி பேரணியாக வந்தனா்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை (டிச.25) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகளுடன் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, வேளாங்கண்ணி பங்கின் ஒருங்கிணைந்த அன்பியங்களின் சாா்பில், கிறிஸ்துமஸ் விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலய விண்மீன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவா்கள், யாத்ரீகா்கள், கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு ஊா்வலமாக சென்றனா். இறுதியாக பேராலயத்தை சுற்றி, மேல் கோயிலில் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

ஊா்வலத்தின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த பலரும் இசைக்கேற்ப நடனமாடியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தது.

இதற்கிடையில், கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேராலய அதிபா் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், பேராலய நிா்வாக தந்தை பரிசுத்தராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையா்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

SCROLL FOR NEXT