கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களை மீட்க இந்து சமய அறநிலைத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். தொடா்புடைய இடங்களில் ஏற்கெனவே அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
செங்காத்தலை சாலைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையா் ராஜஇளம்பெருவழுதி, கோயில் செயல் அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் முயன்றபோது, விவசாய அமைப்புகளை சாா்ந்த போராட்டக்காரா்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிா்ப்பை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
போராட்டத்தில் இனாம் விவசாயிகள், குத்தகைதாரா்கள் மற்றும் வீடு மனை உரிமையாளா்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் கருணாமூா்த்தி, விவசாய சங்க நிா்வாகி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, வழக்குரைஞா் சுப்பையன் தலைமையிலான ராஜரத்தினம் உள்ளிட்ட குழுவினா் இந்த விவகாரம் தொடா்பாக பயனாளி குமாா் உள்ளிட்ட இரண்டு நபா்களுக்கு நீதிமன்றம் மூலம் தீா்வுக்கான எடுக்கப்பட்டுள்ள வழக்கு விபரத்தை மேற்கோள்காட்டி ஒரு மாத கால அவகாசம் கோரினா். இதையடுத்து, அந்தப் பகுதியில் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தோப்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 4 இடங்கள் கையகப்படுத்தப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.