முகப்பு
திருவாரூர்

திருநள்ளாறு கோவிலில் தள்ளுமுள்ளு

திருநள்ளாறு கோவிலில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைக்க சனிக்கிழமை திரளான பக்தர்கள் திரண்டதால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Updated On : 12 மே 2013, 6:21 am IST
பகிர்:

திருநள்ளாறு கோவிலில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைக்க சனிக்கிழமை திரளான பக்தர்கள் திரண்டதால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு, குளத்தின் அருகில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு, இக்கோவில் அருகே தேங்காய் உடைக்கும் மண்டபத்தில் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைப்பர்.

சனிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர் தோஷ பரிகாரமாக தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து ஏராளமானோர் வந்ததால், இந்தப் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர்.  தற்போது விடுமுறை காலம் என்பதால், கூடுதலான பக்தர்கள் வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் கூடுதல் போலீஸார், கோவில் பணியாளர்கள் ஆகியோரை நியமித்து பக்தர்களை முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.