திருவாரூர்

ஏ.டி.எம். கார்டு மூலம் முதியவரிடம் பண மோசடி செய்தவர் கைது

DIN

முத்துப்பேட்டையில் பணிஓய்வு பெற்ற நூலகரிடம் ரூ. 24 ஆயிரம் மோசடி செய்த  இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (71). இவர், கடந்த 2-ஆம் தேதி தனது ஓய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக, முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது,  அங்கு நின்ற இளைஞரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து,  ரகசிய எண்ணையும் கூறி ரூ. 24 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், இந்த இளைஞர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லையென கூறிவிட்டு, ரூ. 24 ஆயிரத்தை மோசடியாக எடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணையன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், எடையூர் சோத்திரியம் ராஜதுரை (35) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜதுரையை கைது செய்து, திருத்துறைப்பூண்டி  குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT