திருவாரூர்

தார்ச் சாலை அமைக்கக் கோரி மண் சாலையில் நாற்று நடும் போராட்டம்

DIN

திருவாரூர் அருகே தார்ச் சாலை அமைக்கக் கோரி, மண் சாலையில் நாற்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகேயுள்ள நடப்பூர் ஊராட்சிக்குள்பட்ட உக்கடை கிராமத்தில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான சாலைக்கு வரவேண்டுமெனில் அப்பகுதியில் உள்ள வெட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் சாலையும் தார்ச் சாலையாக இல்லாமல் மண் சாலையாக உள்ளது.
இதனால் வெட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் எனவும், தார்ச் சாலை அமைக்க  வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மண் சாலையில் நற்று நடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT