முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி தேசியப் பள்ளியில் உளவியல் கருத்தரங்கம்

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் உளவியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் உளவியல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மனநலத் திட்டத்துடன் இணைந்து பள்ளி வளாகத்தில் செல்லிடப்பேசி, சமூக வலைதளங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து உளவியல் கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை உளவியல் மருத்துவர் டி. கவிதா பேசியது: செல்லிடப்பேசி  அதிகம் பயன்படுத்துவதால் மூளை முடக்குவாதம், மன உளைச்சல், விரக்தி ஆகியவை ஏற்படுகிறது. இணையதள விளையாட்டுகளால் மூர்க்கத்தனம், பழிவாங்கும் சிந்தனை ஆகியவை அதிகரித்து வருகின்றன. மேலும், தனிமை விரும்பிகளாகவும், தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பதுடன், படிப்பில் கவனக் குறைவு உள்ளவர்களாகவும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றார்.
சமூக உளவியல் செயல்பாட்டாளர் பி. யோகாம்பாள் : இணையதள விளையாட்டால் உடல் நலன் கெடுவதுடன், சமூக சிந்தனைகள் இல்லாமல்  போகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன என்றார்.
இதில் ஜேசிஐ மண்டல பயிற்சியாளர் எஸ். ராஜ்மோகன், வழிகாட்டி ஆசிரியர் எஸ். அன்பரசு, ஆசிரியர்கள் டி. செல்வராஜ், எம். ராமச்சந்திரன், ஆய்வுக் குழு மாணவர் தலைவர் மா. அருண் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →