தியாகராஜர் கோயிலில் ஜூரதேவா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சன்னிதிக்குள் உள்ள ஜூரதேவா சுவாமிக்கு ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் சன்னிதிக்குள் உள்ள ஜூரதேவா சுவாமிக்கு ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிறந்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் தியாகராஜர் ஆலயத்தின் கொடிமரத்தின் அருகே தென்சந்நிதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது ஜூரதேவா சுவாமி சன்னிதி.
தற்போது தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காக்க ஜூரதேவராக காட்சியளிக்கும் மூன்று கால்களையுடைய சிவபெருமானுக்கு மிளகு ரசமும், சம்பா சாதமும் நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மிளகு ரசமும், சம்பா சாதமும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் என்பதை ஆதிகாலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் எஸ்.வி.டி. கனகராஜ், செயலர் ரெத்தினவேல் மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.