நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள நூலகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட நூலக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள நூலகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட நூலக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அடியக்கமங்கலம் மேலத்தெருவில் நடைபெற்ற முகாமில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ந . தமிழ்க்காவலன், மைய நூலகர்கள் ஐ. அன்னப்பழம், மா. ஆசைத்தம்பி, அடியக்கமங்கல கிளை நூலகர் திலகவதி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று நூலகத்தில் உறுப்பினராக இணைய வலியுறுத்தி பேசினர். முகாம் மூலம் பள்ளி மாணவ, மாணவியர், மகளிர், தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் கிளை நூலகத்தில் உறுப்பினராக இணைந்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை மைய நூலகப் பணியாளர் வீரச்செல்வம் செய்திருந்தார்.