திருவாரூர்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்

DIN

கூத்தாநல்லூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை புனிதநீர் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 
கூத்தாநல்லூர் மரக்கடை ராஜகோபாலசுவாமி தோட்டத் தெருவில் தெட்சிண மங்கள விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 22- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, மரக்கடை சிவன் கோயிலிலிருந்து புனிதநீர், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மாலையில் முதல்கால யாக பூஜை நடைபெற்றது. 
சனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. சிவாச்சாரியார்கள் ஆர்.ஜெகன், முரளி அய்யர், பாபு அய்யர் உள்ளிட்டோர் கும்பாபிஷேகத்தை செய்துவைக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ராஜகோபால சுவாமி தோட்டத் தெரு வாசிகள் மற்றும் கிராமத்தினர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT