கல்வெட்டு பயிலரங்கம் நிறைவு
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்வெட்டு பயிலரங்கம் அண்மையில் நிறைவடைந்தது.
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்வெட்டு பயிலரங்கம் அண்மையில் நிறைவடைந்தது.
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும், மாவட்ட அருங்காட்சியகமும் இணைந்து கல்வெட்டு பயிலரங்கத்தை பிப்.18 முதல் பிப்.23 வரை நடத்தியது. இப்பயிலரங்கில் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மீ. மருதுபாண்டியன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், வட்டெழுத்து, கிரந்த எழுத்து, தமிழ் பிராமி ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன. பயிலரங்கை கல்லூரி முதல்வர் கோ. கீதா, தமிழ் உயராய்வு மையத் தலைவர் செ. அஜிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.