திருவாரூர்

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

மன்னார்குடியில், நகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மன்னார்குடி பெரியக்கடைத் தெருவில் உள்ள பொருள்கள் மொத்த விற்பனை நிறுவனத்தில், மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொ) கோ. இளங்கோவன் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, கடையில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள், உறுஞ்சு குழாய், தட்டு, தேநீர் கப் என ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், அவைகளை வாகனத்தில் ஏற்றி நகராட்சி குப்பை கிடங்குக்கு அழிப்பதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பை மற்றும் பொருள்களை விற்பனை செய்வது தொடர்ந்தால், நகராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைக்கான விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சோதனை நடைபெற்ற கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சோதனை நடைபெறும் என தெரிவித்தனர். சோதனையின்போது, நகர் நல அலுவலர் மருத்துவர் கே. சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் சு. பிரபாகர், நகர அமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT