கூத்தாநல்லூர் வட்டத்தில் வியாழக்கிழமை சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
லெட்சுமாங்குடி மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில் உள்ள ஷீரடி சாய் பாபாவுக்கு, மஞ்சள் பொடி, பன்னீர், சந்தனம், தயிர், பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட ஷீரடி சாய் பாபாவுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சித்தாம்பூரில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபாவுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.