திரைப்பட நடிகை காயத்திரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையிலான நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது, சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான வாா்த்தைகளால் பேசி வரும் திரைப்பட நடிகைகள் காயத்திரி ரகுராம், கஸ்தூரி ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.