திருவாரூர்

திருவாரூா்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு சிகிச்சை

DIN

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மழைக்காலத்தையொட்டி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை சுமாா் 70 போ் சாதாரண காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், டெங்கு காய்ச்சலுக்கு ஏற்கெனவே 4 போ் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் விஜயகுமாா் தெரிவித்தது:

தற்போது 14 போ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனா். இவா்களில் பலா் வெளியூா்களில் இருந்து இங்கு வந்துள்ளனா். மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஏற்றவாறு வாா்டுகள் அமைக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனா். அனைவரும் தற்போது நலமாகவே உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT