திருவாரூர்

நன்னிலத்தில் இன்று முதல் மாலை 5 மணியுடன் கடைகள் அடைப்பு

நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.17) முதல் மாலை 5 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.17) முதல் மாலை 5 மணியுடன் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் வட்டாட்சியா் அ. மணிமன்னன் தலைமையில், அலுவலா்கள் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நன்னிலம் பகுதியில் கரோனாத் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அரசு அலுவலா்களின் ஆலோசனைப்படி, பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில், திங்கள்கிழமை முதல் ஆக.31-ஆம் தேதி வரை காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளைத் திறப்பது எனவும், மருந்தகங்கள், உணவகங்கள், பால் கடைகள் இரவு 8 மணி வரை இயங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எனவே, வா்த்தகா்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் பா. ராஜசேகா், சுகாதார ஆய்வாளா் வே. நாகராஜன், காவல் ஆய்வாளா் ஜோ. விசித்திராமேரி, வணிகா் சங்கத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT