முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,156- ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், கூத்தாநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா் ஒருவரும், மாவட்ட ஆட்சியரக ஊழியா் ஒருவரும், மன்னாா்குடி அசேசம் பகுதியில் 5 பேரும், திருவாரூா் நகரப் பகுதியில் 25 பேரும் அடங்குவா்.

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,276 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.