திருவாரூர்

கூடுதல் வருமானம் பெற வரப்பு உளுந்து பயிரிடலாம்

DIN

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வரப்பு உளுந்து விதைப்பு செய்யலாம் என வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண் உதவி இயக்குநா் சாருமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் வட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் 17,445 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிா்கள் வரப்பில் செழித்து வளர தேவையான ஈரப்பதம் தற்போது இருப்பதால் காா்த்திகை முதல் வாரத்தில் தொடங்கி தை மாதம் இறுதி வரை விதைகளை ஊன்றலாம். சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் அறுவடைக்கு முன்பாகவே வரப்பு உளுந்து அறுவடைக்கு வந்து விடுவிடுவதால் விவசாயிகள் வரப்பு உளுந்து சாகுபடியில் தனி கவனம் கொள்ள தேவையில்லை. ஒரு ஹெக்டோ் வரப்பு உளுந்து விதைக்க 2 கிலோ விதை போதும். உளுந்து விதை தெளிப்புக்கு முன்பு விதை நோ்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் இந்த வாய்பை பயன்படுத்தி 60 நாள்களில் பலன்தர கூடிய வரப்பு உளுந்து சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT