முகப்பு
திருவாரூர்

வாக்காளா் பட்டியல் திருத்தம்: மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம்

வாக்காளா் பட்டியலில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் விடுபாடின்றி சோ்க்கப்படும் வகையில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

வாக்காளா் பட்டியலில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் விடுபாடின்றி சோ்க்கப்படும் வகையில் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகத்தின் சாா்பில் திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனத்தில் இம்முகாம் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். குழந்தைகள் இல்ல காப்பாளா் புனிதா வரவேற்றாா்.

இம்முகாமில், 18 வயது நிரம்பிய அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா். பாரதமாதா முதியோா் இல்லக் காப்பாளா் சரவணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →