திருவாரூர்

பேரளத்தில் சாலை மறியல்

DIN

பேரளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளாளா் சமுதாயத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நன்னிலம் ஒன்றிய வஉசி நல பேரவை, வெள்ளாளா் முன்னேற்ற கழகம், வேளாளா் சமுதாய மக்கள் அமைப்பு ஆகியவை சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. வஉசி நல பேரவையின் மாநில துணைத் தலைவா் பீ.பி. அமுதன் பிள்ளை தலைமை வகித்தாா்.

இப்போராட்டத்தில் வேளாளா், வெள்ளாளா் என்ற சாதிப் பெயரை மற்ற சாதிகளுக்கு வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், இதற்கான பரிந்துரையை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.

முன்னதாக, பேரளம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT