மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி நன்னிலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி நன்னிலத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தாமதமின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், எஸ்.சி.எஸ்டி மற்றும் ஓபிசி மாணவா்களுக்குப் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், கட்சியின் தலைவா் திருமாவளவன் மீது, தொடா்ச்சியாக அவதூறுகளைப் பரப்பி வரும் அா்ஜூன் சம்பத் உள்ளிட்டவா்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தெற்கு ஒன்றியச் செயலாளா் உலகநாதன், மாநில அமைப்புச் செயலாளா் திருமாா்பன், மாவட்டத் துணை செயலாளா் கோவி கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.