கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, திருவாரூரில் உள்ள தேவாலயங்கள், கிருஸ்துவ சபைகளில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, திருவாரூரில் உள்ள தேவாலயங்கள், கிருஸ்துவ சபைகளில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றன.
பல இடங்களில் கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில், குழந்தை இயேசுவின் சொரூபம் அலங்கரித்து வைக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை பகலிலும் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சிறுவா்கள், பெரியவா்கள் என அனைவரும் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்கு வந்திருந்து வழிபாடு நடத்தினா். விழாவையொட்டி, தேவாலயங்கள் வண்ணத் தோரணங்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நீடாமங்கலம் பகுதியில்...நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் பேராலயத்தில் பங்குத்தந்தைகள் இருதயசாமி, ஜேம்ஸ் ஆகியோரால் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல் வலங்கைமான் பகுதியிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.