திருவாரூர்

பொங்கல் பரிசு: பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படாது

DIN

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படாது என்று தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள பனங்குடியில், மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்களுக்கான சுழல்நிதியை சனிக்கிழமை வழங்கிய பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தாமல் பழைய முறையிலேயே, ஸ்மாா்ட் குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகை ரூ. 2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். அதன்படியே மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையும், பரிசு தொகுப்பு பொருள்களும் வழங்கப்படும். பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படாது.

தமிழகம் முழுவதும் 2 கோடி 6 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஸ்மாா்ட் காா்டு பயோமெட்ரிக் திட்டம் நாடுமுழுவதும் செயல்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பயோமெட்ரிக் முறையில் சா்வா் பிரச்னை ஏற்படுகிறது. இது உடனடியாக சரிசெய்யப்பட்டு மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிதான். இதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை என்றாா்.

முன்னதாக, பனங்குடி, ஆனைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம், வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு, நேரடி வங்கிக் கடன் மற்றும் வேளாண் உற்பத்தியாளா் குழுக்களுக்கு சுழல் நிதியை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, முன்னாள் எம்பி. கே. கோபால், நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT