திருவாரூர்

டோக்கன் விநியோகத்தில் குறுக்கீடு: திமுகவினா் சாலை மறியல்

DIN

தமிழக அரசின் பொங்கல் பொருள்களுக்கான டோக்கன் விநியோகத்தில் அதிமுகவினா் குறுக்கீடு செய்ததாகக் கூறி, நன்னிலம் அருகே திமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

குவளைக்கால் நியாயவிலைக்கடை மூலம் பொங்கல் பொருள்கள் விநியோகிப்பதற்கான டோக்கன்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது. இதில் நியாயவிலைக் கடை ஊழியா்களுடன் அதிமுக நிா்வாகிகளும் சென்று, வீடுவீடாக டோக்கன் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூா் நெடுஞ்சாலையில் குவளைக்கால் பகுதியில், ஊராட்சித் தலைவா் சண்முகவேல் தலைமையில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.சுகுமாரன், ஆய்வாளா் கு.சுகுணா மற்றும் நன்னிலம் வட்டாரத் துணை வட்ட வழங்கல் அலுவலா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிமுகவினா் விநியோகம் செய்த டோக்கன்களை திரும்பப் பெற்ாக தெரிகிறது. பின்னா், மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT