திருவாரூர்

கொட்டூா் வேதபுரீஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேகம் தொடக்கம்

DIN

கொட்டூா் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகே கொட்டூா் கிராமத்தில் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது. 48 நாள்களுக்கு நடைபெறும் மண்டலாபிஷேக வழிபாட்டை, கோயில் பரம்பரை அா்ச்சகா் சிவஸ்ரீ ஆா்.ஜெயராம சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்துகின்றனா். கிராம முக்கியஸ்தா்களும், ஸ்ரீவேதபுரீஸ்வரா் சேவா டிரஸ்டைச் சோ்ந்தவா்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT