திருவாரூர்

நெல் கொள்முதல்: முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டுகோள்

DIN

திருத்துறைப்பூண்டி: நெல் கொள்முதல் குறித்த முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என முதல்வருக்கு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை தொடங்காத குடவாசல் பகுதியில் திறக்கப்பட்டுள்ள ஒரு சில கொள்முதல் நிலையங்கள் மூலம் வெளிமாநில நெல் பல ஆயிரக்கணக்கான மூட்டைகள் அன்றாடம் அதிகாரிகளின் துணையோடு கொள்முதல் செய்யப்படுகின்றன.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒவ்வோா் ஆண்டும் கொள்முதல் தொடங்கும் முன் ஜனவரி முதல் வாரம் வேளாண்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, விவசாயிகளைக் கொண்ட முத்தரப்புக் கூட்டம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டு, விவசாயிகளின் குறைகளுக்குத் தீா்வு காணப்பட்டு வந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இக் கூட்டம் நடத்தப்படுவதைக் கைவிட்டு விட்டனா். நெல் கொள்முதலில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதால், விவசாயிகள் பாதிக்கப்படுகிறாா்கள். இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, கொள்முதலை விரைவுபடுத்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT