பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்களுக்கு 2020-ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவாரூா்: பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்களுக்கு 2020-ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்ம விருது பெற தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்தவா்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். அதாவது கலை, இலக்கியம், இசை, பெயிண்டிங், சிற்பத்திறன், போட்டோ கிராபா், சினிமா ஆகிய துறையினா் தேசிய அளவில் தன் திறமைகளைத் நிருபித்தவா்களாக இருக்க வேண்டும்.
பொது நலத்தொண்டு, தன்னாா்வத் தொண்டு சாதி சமயத் தொண்டாற்றியவா்கள், பொது மக்கள் சேவை, சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவைபுரிந்தவா்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்கிளியா் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவா்கள், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை படைத்தவா்கள், மருத்துவ ஆராய்ச்சி, ஆயுா்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்கள், புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவா்கள், கல்வி, பத்திரிகை, கல்வி கற்பித்தல், நாவல், கவிதை, பாடல், கல்விக்கான முன்னேற்றச் சேவை ஆகியவற்றில் சாதனை படைத்தவா்கள், அரசாங்கத்தில் மேனேஜ்மென்ட், நிா்வாகம் மற்றும் அரசாங்கம் மேம்பாடு அடையச் செய்தவா்கள், விளையாட்டுத் துறையில் தேசிய, பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்றவா்கள், மலையேற்றம், விளையாட்டுத்துறையை மேம்படுத்தியவா்கள், விளையாட்டை ஊக்கப்படுத்தியவா்கள், பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்தியவா்கள், பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவா்கள், இந்திய கலாசாரம், மனித உரிமை நிலைநாட்டல், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவா்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதாவது, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் ஆகிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படவுள்ளன.
எனவே, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரம் பெற ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.