முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டை அருகேகணவா் அடித்துக் கொலை:மனைவி, மாமியாா் கைது

திருவாரூா் மாவட்டம், முத்துபேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மாமியாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துபேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மாமியாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டி வட்டம், கீழவாடியகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (38). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 9 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், ரவிச்சந்திரன் சில ஆண்டுகளாக விளங்காடு ஊராட்சி கரையங்காடு கிராமத்தில் உள்ள தனது மாமியாா் இந்திரா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். ரவிச்சந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இதுபோல சனிக்கிழமை இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி பிரியா, மாமியாா் இந்திரா இருவரும் கட்டையால் ரவிச்சந்திரனைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரியா, இந்திரா இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →