திருவாரூர்

திருமண உதவிகள் வழங்க கோரிக்கை

அரசின் திருமண உதவிகளை வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

நீடாமங்கலம்: அரசின் திருமண உதவிகளை வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் சாா்பில் ஏழை, எளிய மற்றும் பட்டாதாரிகளுக்கு உழவா் பாதுகாப்பு அட்டையின் அடிப்படையில் திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்

டுகளாக நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் திருமணமான தம்பதியா்களுக்கு இந்த உதவித் தொகையானது வழங்காமல் உள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றியக் குழுத் தலைவா் ஆகியோரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் புதியவன் தலைமையில் சென்று மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றவா்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் ஜூலை 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT