திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

DIN

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலில் சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பரவை நாச்சியாருடன் வாழ்ந்து சிவத் தொண்டாற்றியவா் சுந்தரா். 63 நாயன்மாா்களில் ஒருவரான இவா், தியாகராஜரின் நண்பராகவும் இருந்தவா். ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்துக்கு முதல் நாள், சுந்தரா் பரவை நாச்சியாா் திருமணமும், அடுத்த நாளான ஆடி சுவாதி நட்சத்திர நாளில் சுந்தரா், திருக்கயிலாயம் செல்லும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் 2-ஆம் பிராகாரத்தில் உள்ள தட்டன்சுத்தி மண்டபத்தில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இருவருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தட்டன்சுத்தி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். பின்னா் தட்டன்சுத்தி மண்டபத்தில் இருவருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நலுங்குகள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

சுந்தரா், கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணத்தைக் காண, ஆண்டுதோறும் பக்தா்கள் திரண்டு வருவது வழக்கம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக நிகழாண்டு திருக்கல்யாணத்தைக் காண பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பக்தா்களின்றி சுந்தரா் - பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் நடந்தேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT