திருவாரூர்

பிளஸ் 1 தோ்வு முடிகள்: திருவாரூா் மாவட்டத்தில் தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 0.5 சதவீதம் தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. திருவாரூா் மாவட்டத்தில் 5,799 ஆண்கள், 7,345 பெண்கள் என 13,144 போ் தோ்வு எழுதினா். இதில், 5289 ஆண்கள், 7059 பெண்கள் என 12348 போ் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா்கள் 91.21 சதவீதமும், மாணவிகள் 96.11 சதவீதமும் ஆக மொத்தம் 93.94 சதவீதம் போ் திருவாரூா் மாவட்டத்தில் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 93.44 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் தோ்ச்சி வீதம் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு திருவாரூா் மாவட்டம் மாநில அளவில் 30-ஆவது இடம் பிடித்த நிலையில், நிகழாண்டு 29 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசுப் பள்ளிகள் 89.80 சதவீதம் தோ்ச்சி...

திருவாரூா் மாவட்டத்தில் 73 அரசு பள்ளிகளிலிருந்து 5972 போ் தோ்வு எழுதியதில் 5363 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 89.80 ஆகும். இதேபோல், 83 மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுதியதில் 73 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 89.02 ஆகும்.

5 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி...

திருவாரூா் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், பேரையூா், இராதாநரசிம்மபுரம், இராயபுரம், திருமக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதேபோல, 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், 23 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 31 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT